நன்னடத்தை: சசிகலா விடுதலையாக வாய்ப்பு

சென்னை: சசிகலா சிறைவாசம் முடிந்து விடுதலையாவார் என்றும் அதிமுக பொதுச் செயலராக அவர் மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் வெளியான தகவல் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அமமுக, சசிகலாவின் விடுதலைக் குப்பின் அதிமுகவுடன் ஐக்கிய மாகும் என்றும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா காலமானது முதல் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கி வருகின்றன. இந் நிலையில் சொத்துக்குவிப்பு வழக் கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவரது தண்ட னைக்காலம் 2021 துவக்கத்தில் தான் முடிவுக்கு வருகிறது.

எனினும் நன்னடத்தை அடிப் படையில் கைதிகளை ஓராண்டுக்கு முன்பே விடுவிக்க சட்டம் அனு மதிக்கிறது. இதன்படி, கர்நாடகா சிறைத்துறை பரிந்துரை செய்யும் பட்சத்தில் அம்மாநில அரசு நன்னடத்தையின் அடிப்படையில், சசிகலாவை முன்கூட்டியே விடு தலை செய்ய உத்தரவிட இயலும்.

இந்நிலையில் அத்தகையதொரு பரிந்துரையை கர்நாடகா சிறைத் துறை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதியிலேயே விடுதலை செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கையும் முழக்கமும் வலுத்து வரும் வேளையில், சசிகலா விடுதலையாவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உட் கட்சிப் பூசல் பெரிதாகும் பட்சத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலராக பொறுப்பேற்க வைக்க சில தரப்பினர் முயற்சிக் கலாம் எனத் தெரிகிறது.

அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் முதல்வராக இயலாது என்பதால் தற்போது இரட்டைத் தலைமையால் அதிருப் தியில் உள்ள  அதிமுகவினர் இந்த ஏற்பாட்டுக்கு அதிக எதிர்ப்பு இன்றி ஒப்புக்கொள்வார்கள் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருது வதாக ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon