ஸ்டெர்லைட் வழக்கு: நீதிபதி விலகல்

ஸ்டெர்லைட் வழக்கு: நீதிபதி விலகல்

1 mins read

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகி உள்ளார்.

ஏற்கெனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மற்றொரு வழக்கை தாம் விசாரித்ததை தமது விலகலுக்கான காரணமாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யுமாறு நீதிபதி சசிதரன், தலைமை நீதிபதிக்கு உடனடியாக பரிந்துரை செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இவர் விசாரிக்க இருந்தார்.