தேனி: உட்கட்சிக் குழப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், சங்கடம் தரும் கேள்விகளை அமைச்சர்களும் அதிமுகவினரும் தவிர்த்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு நேற்று முன்தினம் முதன் முறையாக தனது தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அங்கு பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிய போது, ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் ஓபிஎஸ் அங்கிருந்து சென்றார்.

