32 இலங்கை மீனவர்கள் விடுதலை

32 இலங்கை மீனவர்கள் விடுதலை

1 mins read

சென்னை: இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 32 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக இவர்கள் விடுவிக் கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி புத்தமடத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விரை

வில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த டிசம்பரில் 7 மீனவர்களும், கடந்த மார்ச் சில் 25 இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.