சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகரங்களில் ஐநூறு மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அரசு மானியம் அமைத்துள்ளது. முதலில் சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் இதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். மேலும் பி எஸ்-6 வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்," என்றும் விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்தார்.

