பாஜகவை கழற்றிவிட அதிமுக செயலர்கள் தலைமைக்கு நெருக்கடி

பாஜகவை கழற்றிவிட அதிமுக செயலர்கள் தலைமைக்கு நெருக்கடி

1 mins read
Google News Preferred Icon

சென்னை: இன்னும் 3 மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

"பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சிக்கு மாநகராட்சி, நகராட்சி இடங்கள் சிலவற்றை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். அவற்றில் பாஜக வெற்றி பெறுவது கடினம் என்பதால் திமுக வெற்றி பெற்றுவிடும்.

"எனவே மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெறாமல் இருக்க வேண்டுமானால் அதிமுக தனித்துப்போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும்.

"ஒருமுறை தோற்றது போதும். இனி தனித்து நின்றால்தான் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள்," என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்கையில் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.