'சைக்கோ' கொலையாளி கைது: சென்னை மக்கள் நிம்மதி

'சைக்கோ' கொலையாளி கைது: சென்னை மக்கள் நிம்மதி

1 mins read

சென்னை: சென்னை மக்களையும் மது பிரியர்களையும் மிரட்டி வந்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். மானாமதுரை ரயில் நிலையம் அருகே போலிசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.

ரெட்டேரியில் பாலத்தின் கீழ் கடந்த மாதம் 26ஆம் தேதி மதுபோதையில் மயங்கிக் கிடந்தார் அஸ்லாம் பாஷா.

இதனைக் கண்ட சைக்கோ கொலையாளி அவரது ஆணுறுப்பை துண்டித்தான். இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் அதே பகுதியில் மதுபோதையில் படுத்திருந்த நாராயணன் என்பவரின் ஆணுறுப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இது சைக்கோ கொலையாளியின் வேலைதான் என்பதை யூகித்த போலிஸ், சைக்கோ கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கொலையாளியின் காணொளியை போலிஸ் வெளியிட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில் சைக்கோ கொலையாளி முனியசாமி நேற்றுக் காலை கைது செய்யப்பட்டான்.

மானாமதுரை ரயில் நிலையம் அருகே சைக்கோ கொலையாளியை போலிசார் கைது செய்தனர்.

அவனை சென்னைக்குக் கொண்டுவந்து விசாரிக்க போலிசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த இருபது நாட்களாக சென்னை நகரை திகில் ஆழ்த்தியதோடு மது குடிக்கும் ஆண்கள் மத்தியில் பயமும் எற்பட்டிருந்தது.

சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.