தமிழகத்தில் பட்டுப்புடவை சுருட்டும் டெல்லி கும்பல்

தமிழகத்தில் பட்டுப்புடவை சுருட்டும் டெல்லி கும்பல்

1 mins read

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் விலையுர்ந்த பட்டுப்புடவை வாங்குவது போல் நடித்து பட்டுப் புடவைகளைத் திருடிய நான்கு பெண்கள் உள்பட 6 பேர் கெண்ட வடமாநில கும்பலைக் கடை ஊழியர்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், டெல்லியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து துணிக்கடையில் விலையுயர்ந்த பட்டுப்புடவைகளைத் திருடி நல்ல விலைக்கு விற்று வந்ததை கும்பல் வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களிடம் இருந்து விலையுயர்ந்த பட்டுப்புடவைகளையும் காரையும் பறிமுதல் செய்த போலிசார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.