அதிமுகவுக்கு வழிகாட்டி குழு

அதிமுகவுக்கு வழிகாட்டி குழு

2 mins read
6aa18a93-baf9-410e-9e33-a88f8bd3d73d
கட்சிக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி (வலது), துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் அதிமுக பிரமுகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: அதிமுக கட்சி விவகாரங் களைக் கவனிப்பதற்காக விரைவில் 11 பேரைக் கொண்ட வழிகாட்டிக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அத்தகைய ஒரு குழு அமையும் என்று 2017 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதன்முதலாக உறுதி தெரிவிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். அந்தத் தேதியில்தான் பன்னீரும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்தனர்.

பல்வேறு தேர்தல்களுக்கும் உரிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி முதல் பலவற்றையும் புதிய குழு நேர்த்தியாக செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் புதன்கிழமை நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட் டத்தில் உரையாற்றிய அவர், கட்சி யின் துணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடியுடன் சேர்ந்து அதிமுகவினருக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார்.

யாராக இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு தலைவர்களும் உறுதியாக தெரிவித்தனர்.

உரிய அனுமதியின்றி ஊடகங் களில் விவரங்களைத் தெரிவிப் போருக்கு எதிராக நடவடிக்கை பாயும் என்று அவர்கள் கூறினர்.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு அந்தந்த தொகுதி பொறுப்பாளர் களே காரணம் என்றும் அறிக்கை தெரிவித்தது.

தோல்விக்கான காரணங் களைக் கண்டறிந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் அறிக் கையில் வலியுறுத்தினர்.

அந்தக் கூட்டத்தில் சி.வி. சண்முகம், ஓ.எஸ் மணியன் ஆகிய இரு அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

அவர்களுடைய உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்ததால் அந்த இரு அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வேளையில், செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆளூநரை முதல் வர் சந்தித்தது வழக்கமான ஒன்றுதான் என்றார்.

அதிமுக கூட்டம் நடந்த போது வடக்கு சென்னை அதிமுகவினர், எடப்பாடி கட்சி பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று கோரும் சுவ ரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அதேவேளையில், சிவகங் கையில் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதி முகவின் பொதுச் செயலாளராக ஆகவேண்டும் என்று சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தேனியில் ஓபிஎஸ் ஆதரவு சுவரொட்டிகள் காணப்பட்டன.

இவ்வேளையில், அதிமுக வுக்கு ஒருவர்தான் பொறுப் பேற்கவேண்டும் என்ற பிரச் சினை பற்றி கூட்டத்தில் விவா திக்கப்படவில்லை என்று பிரமுகர்கள் பலரும் திட்டவட்ட மாகக் கூறினர்.