சென்னை: நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் நடவடிக்கை எடுப்பீர்களோ என்று போலிசை பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாமர மாது ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன் காணாமல் போன தன் மகளைக் கண்டு பிடிக்க போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, "சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா?. சம்பளம் வாங்கும் காவல் துறையினர் கடமையைச் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் யாரேனும் காணால் போனால் சும்மா இருப்பீர்களா?
"நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே போலிஸ் நடவடிக்கை எடுக்குமா?," என்று நீதிபதிகள் கவலையுடன் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

