மதுரை மீனாட்சி சொத்துக்கே  சோதனை; மக்கள் வேதனை

மதுரை: மதுரை மீனாட்சி அம் மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 200 கோடி மதிப்புள்ள ஒரு சொத்து தொடர்பில் அந்தக் கோயில் நிர்வாகத்துக்கும் வரு வாய்த் துறைக்கும் இடையில் மோதல் வெடித்து, அந்தச் சொத்தை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கே சோதனை ஏற்பட்டுவிட்டதாக வும் அது பெரும் வேதனையாக இருக்கிறது என்றும் பொதுமக் கள் பலரும் கருத்து கூறினர்.

மதுரை அருகே பொன்மேனி யில் 14 ஏக்கர் பரப்புள்ள நிலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் ஆனால் அது தனி நபருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் கோயில் நிர்வாகம் தெரி விக்கிறது.

இதன் தொடர்பில் தற்காலிக ஆட்சியர் சாந்தகுமாரிடம் நிர் வாகம் புகார் செய்துள்ளது. அந்தச் சொத்தை மீட்டுத் தரும் படி ஆட்சியரை நிர்வாகம் கேட் டுக்கொண்டு இருக்கிறது.

இவ்வேளையில், கோயில் நிர் வாகம் தவறான புகார் அளித்து இருக்கிறது என்று வருவாய்த் துறையினர், அதே தற்காலிக ஆட்சியரிடம் புகார் அளித்து அம்மன் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த நிலம் தொடர்பில் ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தி இருப்பதாகவும் அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது அல்ல என்று அவர்கள் தீர்ப்பு அளித்து இருப்பதாகவும் வரு வாய்த் துறை தெரிவிக்கிறது.

கோயில் நிர்வாகத்திற்கும் வருவாய்த் துறையினருக்கும் இடையில் மோதல் போக்கு உரு வாகி இருப்பதால் உடனடி விசா ரணைக்கு வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாற் றப்பட்ட ஆட்சியருக்குப் பதிலாக புதிய ஆட்சியர் கடந்த 10 நாட் களாக நியமிக்கப்படவில்லை.

இத்தாமதத்தைப் பயன்படுத் திக்கொண்டு முறைகேடான ஆவண மாற்றங்கள் நடக்கக் கூடும் என்றும் கோயில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

மதுரை சொக்கிக் குளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதாக ஏற்கெனவே பெரும் பரபரப்பு கிளம்பியது.

இந்த நிலையில், இப்போது வேறு ஒரு பிரச்சினை தலை தூக்கி இருக்கிறது.

இவ்வேளையில், இது பற்றி கருத்து கூறிய பொதுமக்கள், மீனாட்சி கோயிலுக்குச் சொந்த மான நிலத்திற்கே இப்படி சோதனை ஏற்பட்டு இருக்கிறது என்றும் இதில் பல்வேறு மர்மங் கள் புதைந்து கிடப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படியே விட்டு விட்டால் கோயில் சொத்துகள் எல்லாம் தனியார் கைகளுக்குப் போய்விடும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!