விவசாயத்தில் 38% கொத்தடிமைச் சிறார்கள்

விவசாயத்தில் 38% கொத்தடிமைச் சிறார்கள்

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் கொத்தடிமைகளாகவும் இதர வழிகளி லும் வேலை பார்த்து பிழைக்கும் சிறார்களில் குறைந்தபட்சம் 38.33% விவசாயத்திலும் விவசாயம் தொடர்பான தொழில்துறைகளிலும் பாடுபடுகிறார்கள் என்று 'சிறார் உரிமையும் நீங் களும்' (CRY) என்ற அரசுசாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சிறார் கொத்தடிமை ஒழிப்பு நாளையொட்டி ஜூன் 12ஆம் தேதி இந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்தியாவில் 2011 கணக் கெடுப்பின்படி குறைந்தபட்சம் 40.3 மில்லியன் சிறார்கள் வேலை பார்க்கிறார்கள்.

அவர்களில் 62.5% விவசாயத் திலும் அதன் தொடர்புடைய தொழில்துறைகளிலும் வேலை செய்கிறார்கள். மொத்தமாகப் பார்க்கையில் 25.23 மில்லியன் சிறார்கள் வேளாண்மைத் துறை யில் பாடுபடுவதாக 2011 மக்கள் தொகை கருத்தெடுப்பு மூலம் தெரியவந்தது.

தமிழகத்தில் குறைந்தபட்சம் 948,052 சிறுவர்கள், 618,575 சிறுமிகள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 38.33% வேளாண் மைத் துறையில் பாடுபடுகிறார்கள் என்று அறிக்கை கூறியது.

அவர்களுக்கு வயது 5 முதல் 19 வரை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் மீட்கப்படும் சம்பவம் பற்றிய தகவல்கள் அப்போதைக் கப்போது வெளிவருவதுண்டு.