சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வில் மொத்தம் 200 கேள்வி கள் கேட்கப்பட்டன. அவற்றில் 24 கேள்விகள் தவறானவை என்பதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று தமிழ்நாடு அரசாங்க தேர்வாணையம் ஒப்புக் கொண்டது.
அந்த ஆணையத்தின் இந்தப் பதிலைக் கேட்டு கடும் கோப மடைந்த நீதிபதிகள், மிகவும் முக் கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற தேர்வுகளில் குளறுபடிகள் நடப் பதை ஏற்க முடியாது என்றும் தவறான கேள்விகள் என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் காட்ட மாகத் தெரிவித்தனர்.
அதனையடுத்து, தவறான கேள்விகள் கேட்கப்பட்டதன் தொடர்பில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் காலஅவ காசம் கேட்கப்பட்டது. குரூப் 1 தேர்வை சுமார் 68,000 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன.

