சென்னை: லாரி குடிநீருக்கு முன்பதிவு செய்து இனி அதிக நாட்கள் காத்திருக்கத் தேவை யில்லை என்றும் ஒதுக்கீட்டு முறையில், குறைந்த கொள் ளளவு லாரி குடிநீர் உடனுக்குடன் பொதுமக்களுக்கு விநியோகிக் கப்படும் என்றும் சென்னை குடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர் மந்தர் சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், செயல் இயக்கு நர் த.பிரபுசங்கர் ஆகியோர் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியபோது, "சென்னை மாநகரின் கோடை கால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
"சென்னையில் தற்போது தினமும் 900 லாரிகள் மூலமாக 9,400 முறை குடிநீர் வழங்கப் படுகிறது. அதில் 6,500 முறை இலவசமாகவும் மீதமுள்ள 2,900 முறை முன்பதிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது.
"காலதாமதமின்றி குடிநீர் வழங்கும் வகையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு அடுக்குமாடி கட்டடங்கள், தனி வீடுகள் என்ற ஒதுக்கீட்டு முறை யில் பதிவு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.
"பருவமழை பெய்யாவிட்டால் கூட சென்னை மக்களுக்குத் தினமும் 52.5 கோடி லிட்டர் குடிநீரை தடையின்றி வழங்க முடியும்," என்று தெரிவித்தனர்.

