சமைப்பதற்கு தண்ணீரின்றி மூடப்படும் உணவகங்கள்

சென்னை: தலைநகர் சென்னை யில் குளிப்பது, சமைப்பது, குடிப் பது உள்ளிட்ட முக்கிய அத்தியா வசிய தேவைகளுக்கு கூட போது மான அளவில் நீரின்றி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்ற னர். இந்த கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக வர்த்தக நிறுவனங் களும் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி உள்ளன.

இதன் காரணமாக சென்னை யில் பல ஹோட்டல்கள் மூடப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளன.

சென்னையின் முக்கியப் பகுதி களில் இருக்கும் சில உணவகங் கள் உணவு தயாரிக்கப் போதிய நீரின்றி உணவகங்களை மூடி விட்டன.

இன்னும் சில உணவகங்கள், சாப்பாடு, குழம்பு எல்லாம் செய் யாமல் வெறும் கலவை சாதங் களை மட்டுமே தயாரித்து சமா ளித்து வருகின்றன.

உணவகங்களை மூடுவதாலும் உணவு தயாரிப்பைக் குறைப் பதாலும் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக சென்னை நுங்கம்பாக் கம், தேனாம்பேட்டையில் உள்ள சில உணவகங்கள் மூடப்பட் டுள்ளன. தனியார் தண்ணீர் லாரி களும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதால் தண்ணீர் வாங்கி கட்டுப்படியாகவில்லை எனக்கூறி உணவகங்களை மூடியுள்ளனர் உரிமையாளர்கள்.

ஒரு வாரத்திற்கும் மேலாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் உரிமையாளர்கள் கூறி யுள்ளனர்.

அதேநேரத்தில் சில உணவகங் கள் சமையலைப் பாதியாகக் குறைத்துள்ளன. உணவு வகை களையும் உணவின் அளவையும் ஹோட்டல்கள் பாதியாகக் குறைத் துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த தண்ணீர்ப் பிரச்சினை இருப்பதால் மதிய வேளையில் மட்டும் சாப் பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்றும் தமிழ்நாடு ஓட்டல் உரி மையாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.

தண்ணீரின்றி தவிக்கும் தக வல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வரவேண்டாம் என்றும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படியும் அறிவுறுத்தி உள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் லாரி தண்ணீருக்குச் செலவு செய்யமுடியாமல் வீட்டைக் காலி செய்யும் நிலைக்குத் தள் ளப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஹோட் டல்களில் தண்ணீருக்கான செலவு மட்டும் வழக்கத்தைவிட 25% அதிகரித்துள்ளது. எனவே, தண் ணீரைச் சிக்கனமாகப் பயன் படுத்துமாறு ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.ரவி கூறியபோது, “இட்லி தோசை போன்ற டிபன் வகை களுக்கு குறைந்த தண்ணீர் போதும். மதிய சாப்பாட்டிற்கு மட்டும் சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர், கூட்டுப் பொரியல் போன் றவை தனித்தனி பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன.

“இதனால் மற்ற உணவு வகை களைவிட சாப்பாடு தயாரிக்கவும் அவற்றை வழங்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கழுவவும் அதிக தண்ணீர் செலவாகிறது. தற் போது தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் 12,000 லிட்டர் தண்ணீரைத் தனி யாரிடம் 1,800 ரூபாய்க்கு வாங் கினோம். இப்போது தட்டுப்பாடு அதிகமானதால் 5,000 ரூபாய் வரை கேட்கின்றனர்.

“இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதில் சிரமம் உள்ளது. எனவே பிரச்சினையைச் சமாளிக்க சாப்பாட்டு விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!