திருமணம் முடிந்ததும் விழிப்புணர்வு பிரசாரம்

சேலம்: தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணத்தை மேற் கொள்ள வலியுறுத்தி நேற்று திருமணம் முடித்த புதுமணத் தம்பதிகள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இந்த தம்பதி களின் பொதுநலத்தை மக்கள் பலரும் மனமுவந்து பாராட்டினர்.

சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ், 28, சென் னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சேலம் ஜங்ஷனை சேர்ந்தவர் தனசிரியா, 22.

இவர்கள் இருவருக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது.

உடனே அவர்கள் தலைக்கவச பிரசாரம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதியைக் கோரினர். புதிதாக திருமணமான தம்பதிகள் என்ப தால் அவர்கள் வெளியில் செல் வதற்கு முதலில் மறுத்தாலும் தம்பதியின் உறுதியைப் பார்த்து அனுமதித்தனர்.

இதையடுத்து சீலநாயக்கன் பட்டி திருமண மண்டபத்தில் இருந்து திருச்சி முக்கிய சாலைகள் வழியாக சீலநாயக்கன் பட்டி பைபாஸ், ரவுண்டானா வரை சென்று மக்களிடம் தலைக்கவசம் குறித்து எடுத்துக் கூறினர்.

“வாழ்க்கையில் புதிய அத்தி யாயத்தைத் தொடங்கும் நாங்கள் சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியைத் தெரிவிக்க விரும்பி னோம். இன்றைய கால கட்டத்தில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பெரும் பாலான உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது. அதனால் பிரசாரம் செய்தோம்,” என்று மணமக்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!