வங்கி மிரட்டல்: விவசாயி மரணம்

வங்கி மிரட்டல்: விவசாயி மரணம்

1 mins read

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி, 56, என்ற விவசாயி (படம்) ஒரு தனியார் வங்கிக்கு வட்டி யுடன் ரூ.5 லட்சம் கடனைச் செலுத்த வேண்டி இருந்தது.

உடனே கடனை அடைக்கும்படியும் இல்லை எனில் நிலம் பறிமுதல் செய்யப்படும் என்றும் வங்கியினர் மிரட்டியதை அடுத்து ஜெயக்கொடி பூச்சி மருந்தைக் குடித்து மரணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடும்பாறை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.