வாகனங்கள்: 3வது இடத்தில் தமிழகம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 158,433 புதிய வாகனங்கள் பதியப்பட்டன. இந்த எண்ணிக்கை உத்திரப் பிரதேசத்தில் 281,175 ஆகவும் மகாராஷ்டிராவில் 199,509 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் புதிய வாகனங்கள் அதிகமாக பதியப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.