102 போலிஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் போக்கு வரத்து விதிகளை போலிசார் மீறி விட்டதாக பொதுமக்கள் பல புகார்களைத் தாக்கல் செய்தனர்.

அந்தப் புகார்களை அடிப்படை யாக வைத்து குறைந்தபட்சம் 102 போலிஸ்காரர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நகரின் பல பகுதிகளிலும் சென்ற வாரம் முதல் போலிஸ் காரர்கள் போக்குவரத்து விதி களை மீறி இருக்கிறார்கள் என்று பொதுமக்கள் ஆதாரங்களுடன் போலிஸ் துறையிடம் புகார்களைத் தாக்கல் செய்தனர்.

சென்னை போலிஸ் துறை GCTP என்ற ஒரு குடிமக்கள் செயலிச் சேவையை சென்ற வாரம் தொடங்கியது. அந்தச் சேவை வழி பொதுமக்கள் புகார்களை ஆதாரங்களுடன் தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்று சென்னை மாநகர போலிஸ் ஆணையர் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

DIGICOP – 2.0 என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய ஆணையர், யாராக இருந்தாலும் அது போலிஸ் காரராக இருந்தாலும் அவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

GCTP செயலி வழியாக போலி சாருக்கு 131 புகார்கள் கிடைத்த தாகவும் 114 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. DIGICOP செயலி இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. அது முதல் அந்தச் செயலியை 72,155 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

செல்பேசிகள் திருட்டுப்போய் விட்டதாக அந்தச் செயலி வழி 8,311 பேர் தெரிவித்தனர். அவற் றில் 1,200 கைபேசிகள் மீட்கப் பட்டு இருக்கின்றன.

இன்னும் பல சேவை வசதிகளு டன் இப்போது DIGICOP – 2.0 செயலி தொடங்கப்பட்டு இருப்ப தாகவும் இது இன்னும் உதவும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!