கோவையை அடுத்து மதுரையிலும் தீவிர சோதனை

கோவையை அடுத்து மதுரையிலும் தீவிர சோதனை

1 mins read

மதுரை: தேசியப் புலனாய்வு முகவை அதிகாரிகள் மதுரையில் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையால் பரபரப்பு நிலவியது.

வெளிநாட்டுத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்களை வளைத்துப் பிடிக்கவே இச்சோதனை நடைபெற்றதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தினங்களுக்கு முன்பு கோவையிலும் இத்தகைய அதிரடிச் சோதனை நடை பெற்றது. அச்சமயம் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு டைய மூன்று ஆடவர்கள் கைதாகினர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சிலருக்கும் தீவிர வாத தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே காஷ்மீரில் இயங்கி வரும் ஐஎஸ் பயங்கர வாத அமைப்பின் ஆதர வாளர்களுக்கு பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய தீவிரவாத கண்காணிப்புக் குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சு அமைத்துள்ளது. இக்குழு விரைவில் செயல்பட இருப்பதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.