பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்

பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்

1 mins read
f2c0aef9-3326-4e23-b222-05fa01ef451f
கோப்புப்படம் -

சென்னை: தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற் படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு கடந்த ஜனவரி மாதம் மாநில அரசு தடைவிதித்தது.

அதன் பிறகும் சில தரப்பினர் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட் களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் தடையை முழுமையாக முழுவீச்சில் அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு இன்று முதல் அபராதம் வசூலிக் கும் முறை தீவிரமாகத் தொடங் கப்பட உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் நூறு ரூபாயும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

சிறு பெட்டிக்கடைகள் முதல் பேரங்காடிகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு விதிமீறல் இருப்பின் அபராதம் விதிக்க உள்ளனர்.