தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

1 mins read
20a2850e-3a4d-49a1-90b3-f4ee60cdb562
கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது. -

சேலம்: தேர்தலில் போட்டியிட்டதால் கடன்சுமை அதிகரித்து அதை அடைப்பதற்கு கரும்புச்சாறு விற்று, பெட்டிக்கடை நடத்தி கடுமையாக உழைத்து வருகிறார் மாது என்ற பெண்மணி.

48 வயதான இவர், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

இதன்பின்னர் அவர் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலராக நியமிக்கப்பட் டார். இதையடுத்து அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வாய்ப்புக் கேட்டவருக்கு 2011ஆம் ஆண்டு நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

எனினும் தேர்தலில் தோல்வி கண்டதுடன் 10 லட்சம் ரூபாய் அளவுக்குக் கடன் சுமையும் சேர்ந்து கொண்டது.

தற்போது வாங்கிய கடனை அடைக்க பெட்டிக்கடை நடத்தி வரும் மாது, அண்மைய நாட்க ளாக கரும்புச்சாறு விற்பனையும் செய்து வருகிறார்.

கரும்புச்சாறு விற்பனையில் ஆர்வமாக ஈடுபட்டுள்ள மாது.படம்: ஊடகம்