சென்னை: மருத்துவப் படிப்பின் தரத்தை நீட் தேர்வு உயர்த்தும் என்பதும் மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை அத்தேர்வு தடுக்கும் என்பதும் அழகாக சித்திரிக்கப்பட்ட அபத்தங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் பாடவாரியாக தகுதி மதிப்பெண் எடுக்கமுடியாத மாணவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். தமிழக அரசு நீட் தேர்வை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
"நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறது; கல்வி வணிகமாவதைத் தடுக்கிறது என்று பொய்யாகக் கூறி மக்களையும் மாணவர்களையும் மத்திய அரசு இனியும் ஏமாற்ற வேண்டாம்," என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

