தண்ணீர்ப் பஞ்சத்தால் பள்ளிக்கூடங்களில் தவிக்கும் குழந்தைகள்

தண்ணீர்ப் பஞ்சத்தால் பள்ளிக்கூடங்களில் தவிக்கும் குழந்தைகள்

1 mins read
6e93aaf0-9813-47a7-a6c1-1f1f07104c64
கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதியுறும் சென்னை மக்கள். படம்: ஏஎஃப்பி -

சென்னையில் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்கச் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களைத் தண்ணீர்ப் போத்தல்களில் தண்ணீர்க் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குடிநீருக்கு ஒரு போத்தல், கழிவறைக்கு ஒரு போத்தல் என இரண்டு போத்தல்களைக் கொண்டுவருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநகராட்சி சார்பில் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் வசதிக்காக பெற்றோர், ஆசிரியர் சங்கம் மூலம் நிதி திரட்டப்படும் என்றார்.

அதைக் கொண்டு தேவைப்படும் பள்ளிகள் தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது பள்ளிகளில் இருக்கும் தண்ணீர் நிலவரம், எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள தண்ணீர்ப் பிரச்சினை ஆகியவை குறித்துப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.