தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞசத்தால் கட்டுமானத் துறை நிலைகுலைந்தது

தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞசத்தால் கட்டுமானத் துறை நிலைகுலைந்தது

1 mins read
5d01ecc9-3755-40d0-be16-073460339aac
தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம். படம்: சதீ‌ஷ் -

தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், நீர்ப் பற்றாக்குறை காரணமாக கட்டுமான நிறுவனங்கள் தங்களது கட்டுமான பணிகளை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளன.

கட்டுமானத்தைப் பொறுத்தவரையில் அஸ்திவாரம், தூணை மேலே எழுப்புவது, சாந்து குலைப்பது என அனைத்திற்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

ஆனால் தண்ணீர்ப் பல இடங்களில் மிகக் குறைவாக இருப்பதால் அத்தகைய தண்ணீர்ப் பொதுமக்களின் அன்றாடத் தேவைக்கே பயன்படுத்தப்படும் எனக் கட்டுமான நிறுவனங்கள் கருதுகின்றன.

இதனால் கட்டுமானப் பணிகளைத் தற்போது நிறுத்திவைத்துவிட்டுத் தண்ணீர்ப் பற்றாக்குறை தீர்ந்த பின்னர் கட்டுமான பணிகளைத் தொடங்கலாம் எனவும் கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கட்டுமான நிறுவனங்களின் இந்தத் திடீர் முடிவால் அதில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமான தொழில்களில் ஏராளமான வடமாநில இளைஞர்களும் பணியாற்றுகின்றனர்.

தற்போது வேலை இல்லை என்றவுடன் அவர்கள் தங்களது மாநிலத்திற்கே மீண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பல லட்சம் ரூபாய்களை வங்கியில் கடன் பெற்றுவிட்டு வீடு கட்ட திட்டமிட்டிருந்தவர்கள் எல்லாம் தற்போது கட்டுமான நிறுவனங்களின் திடீர் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.