போலிஸ் பாதுகாப்புடன் தண்ணீர் விநியோகம்

தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச் சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், குடிநீர் விநி யோகம் செய்யும் இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்கும் இடங்களைத் தேடி பொதுமக்கள் அலைமோது கின்றனர்.

இதனால் சென்னையில் இரவு பகல் பாராமல் வாகனங் களில் குடும்பத்துடன் பிளாஸ் டிக் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலைகின்றனர்.

பெரும்பாலும் லாரிகளில் தண்ணீர் நிரப்பும் நீரேற்று நிலையங்கள் உள்ள வள்ளுவர் கோட்டம், அண்ணாமலை நகர், கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்குச் சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்துச் செல்கின்றனர்.

அவ்வாறு தண்ணீர் பிடிக்கும் இடங்களில் பொது மக்களுக்கு இடையேயும் லாரி ஓட்டுநர்களுக்கு இடையேயும் வாய்த்தகராறு ஏற்பட்டு விடு கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக, கீழ்ப்பாக் கத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்குத் தண்ணீர் பிடிக்க வரும் பொது மக்களை வரிசைப் படுத்தி தண்ணீர் விநியோகம் செய்யும் பணியில் போலிசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 150 முதல் 193 நாட்கள் வரை மழை பெய்யவில்லை. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டில்தான் தொடர்ந்து 191 நாட்கள் மழை பெய்யவில்லை. 2003ஆம் ஆண்டு அதிகபட்சமாக 200 நாட்கள் வரை மழை பெய்யாமல் இருந்தது.

நோயாளிகள் அவதி

சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவரும் சூழலில், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏராளமான உள்நோயா ளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகளும் சிகிச்சைக் காக அங்கு வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!