கறுப்புப்பட்டை அணிந்து கடமை தவறாமல் சேவையாற்றிய தமிழக மருத்துவர்கள்

கறுப்புப்பட்டை அணிந்து கடமை தவறாமல் சேவையாற்றிய தமிழக மருத்துவர்கள்

2 mins read
99d0c993-f296-417a-917a-f181fc72baba
ஒருபக்கம் போராட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக மருத்துவர்கள் மறுபக்கம்  தாங்கள் ஆற்றவேண்டிய மருத்துவ சேவைகளையும் தொடர்ந்து மேற்கொண்ட படியே  போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

சென்னை: மேற்கு வங்க மாநிலத் தில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஒருபக்கம் ஆதரவைத் தெரிவித் திருந்த தமிழக மருத்துவர்கள் மறுபக்கத்தில் அமைதியாக தங்க ளது மருத்துவ சேவைகளையும் தொடர்ந்தனர்.

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் மருத்துவர்கள் கறுப்புப்பட்டை அணிந்துகொண்டு மருத்துவச் சேவையில் ஈடுபட்டனர்.

சில இடங்களில் மருத்துவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க கருப்புப் பட்டையுடன் தலையில் தலைக்கவசம் அணிந்துகொண்டு மருத்துவமனை வாயில் முன்பு நின்று குரல் எழுப்பினர்.

போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பணிகளைப் புறக்கணிக்காமல் சேவையில் தொடர்ந்தனர்.

கோல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழு வதும் உள்ள மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி தமிழகத்திலும் இந் தப் போராட்டம் நேற்று நடந்தது.

இருப்பினும் தமிழகத்தில் மருத் துவர்கள் எந்த ஒரு மருத்துவ சேவைகளையும் புறக்கணிக்காமல் தலையில் தலைக்கவசம் அணிந்து கொண்டும் கருப்புப் பட்டை அணிந்துகொண்டும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம், கோல் கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கு மருத்துவர் களின் கவனக்குறைவே காரணம் என நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை தாக்கியுள்ள னர்.

இதைக் கண்டித்துக் கோல் கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பான ஐஎம்ஏ, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக வும் நடவடிக்கை எடுக்கவேண் டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.