சென்னை: மக்களின் உணர்வை நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் எதிரொலிக்கவில்லை என்பதால் மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம் எங்கும் மக்கள் தவிக்கும் வாய்க்கு தண்ணீர்க் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெறாமல் தனது கட்சியின் சொந்தப் பஞ்சாயத்து கதைகளை மட்டும் பேசிவிட்டுத் திரும்பியிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

