சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
"மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மோசடியாக நடந்த மாணவர் சேர்க்கையினால் தகுதியுள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தகுதியில்லாத பலர் சேர்ந்துள்ளனர்.
"2019-2020ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

