நீர் பற்றாக்குறை; கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

நீர் பற்றாக்குறை; கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

2 mins read
88c43259-933e-40ac-b3db-a4fd17bc0d4f
சென்னையின் பல பகுதிகளிலும் இதுபோல் தொடரும் கட்டுமானப் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம் -

சென்னை: சென்னையில் நீர் பற் றாக்குறை காரணமாக ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில், இப்போது கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டு மானப் பணிகளை நிறுத்தி வைக் கும் முடிவுக்கு வந்துள்ளன.

கட்டுமானத்தைப் பொறுத்த வரையில் அஸ்திவாரம், தூண் களை மேலே எழுப்புவது, சாந்து குலைப்பது என அனைத்திற்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

ஆனால் இந்த தண்ணீர் பல இடங்களிலும் மிகக் குறைவாகவே கிடைப்பதாலும் அன்றாட அத்தி யாவசிய தேவைகளுக்கான நீரை பெற குடும்பம் குடும்பமாக மக்கள் பலரும் இரவுபகலாக அலைந்து அவதிப்பட்டு வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கட்டுமானப் பணிகளைத் தற்போது நிறுத்தி வைத்துவிட்டு தண்ணீர் பற்றாக் குறை தீர்ந்தபின்னர் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம் என வும் கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கட்டுமான நிறுவனங்களின் இந்த திடீர் முடிவால் அதில் பணியாற்றும் ஏராளமான தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமானத் தொழில்களில் ஏராளமான வடமாநில இளைஞர் களும் பணியாற்றி வந்தனர்.

தற்போது வேலை இல்லை என்றவுடன் அவர்கள் தங்களது மாநிலத்திற்கே மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பல லட்சம் ரூபாய் களை வங்கியில் கடனாகப் பெற்று வீடு கட்ட திட்டமிட்டிருந்தவர்கள் எல்லாம் தற்போது கட்டுமான நிறுவனங்களின் திடீர் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது தொழிற் சாலைகள், அலுவலகங்கள், வீடு களில் மழைநீர் சேமிப்புக் கட்ட மைப்புகள் தூர்ந்து கிடக்கின்றன.

இந்நிலையில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத் துவது குறித்த அறிவிப்பை வெளி யிடத் தமிழக அரசு தயாராகி வருகிறது.