சென்னை: வட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இரண்டு நாட் களுக்கு அனல் காற்று சுட்டெரிக் கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
பரவலாக மாவட்டங்கள் தோறும் மழை பெய்தால்தான் வெப்பம் குறைவதற்கான வாய்ப் பிருக்கும் என்றும் இல்லையேல் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்றும் வானிலை மையம் கூறி யுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள் ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
வழக்கத்துக்கு மாறாக வெப்பம் இயல்பு நிலையைக் காட்டிலும் கூடுதலாக 4 முதல் 5 டிகிரி அதி கரித்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறுகையில், "தென்மேற்குப் பருவமழை, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியா குமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
"அதேநேரத்தில் வட தமிழகத் தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், வேலூர், திரு வண்ணாமலை ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் அனல்காற்று தீவிரமாக வீச வாய்ப்புள்ளது.
சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட் டங்களின் சில பகுதிகளில் இன்று அனல் காற்று வீச வாய்ப்பு உள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேல் பதி வானது.
தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் வெப்பநிலை சதமடித் துள்ளது.
இந்நிலையில் வேலூர், திரு வண்ணாமலை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் தீவிர அனல்காற்று வீச வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங் களில் அடுத்த 2 நாட்களுக்குக் கடும் அனல்காற்று நீடிக்கும்.
இதனால், மக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

