ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் பணி நீக்கம்

ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் பணி நீக்கம்

1 mins read
a6c2b0e0-0e81-4dfe-a28f-7c4bf1f8e1bc
திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை -

திருச்சி: திருச்சியில் மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாகத் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாகத் திருவெறும்பூர் புதிய தாசில்தாராக ரபீக் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவெறும்பூர் தாசில்தாராக இருந்தவர் அண்ணாதுரை, 44. இவர், "ஆளுங்களைக் கை மாத்தி விடற வேலை இருக்கக் கூடாது. 50,000 ரூபாய் வந்து குடுத்துடுங்க," என்று மணல் அள்ள வந்த லாரி உரிமை யாளர் ஒருவரிடம் வாய்கூசாமல் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங் களில் வேகமாகப் பரவியது.

இதையறிந்த ஆட்சியர் சிவராசு, அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதே போல் மணல் கடத்தல் டிராக் டரை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் கேட்டது தொடர்பாக துறையூர் தேர்தல் பிரிவு தாசில் தார் ஆனந்து மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.