கஞ்சா விற்பதாக காணொளி வெளியிட்டவர் கைது

கஞ்சா விற்பதாக காணொளி வெளியிட்டவர் கைது

1 mins read

கடலூர்: தாம் கஞ்சா விற்பதாக பகிரங்கமாகக் கூறும் ஒருவரின் காணொளிப் பதிவு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நெய்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த ரவுடி தாம் கஞ்சா விற்பதாகவும், கஞ்சா தேவையெனில் தம்மை அணுகலாம் என்றும் கூறியது காணொளியில் பதிவாகி உள்ளது.

மேலும் தன் கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து போலிசார் அவனைக் கைது செய்துள்ளனர்.