ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல்

1 mins read

திருச்சி: விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நான்கு ஆடவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களைச் சோதித்த போது, தங்கள் உடலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நால்வரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதே போல் திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த பயணி ஒருவரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 19.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.