பேருந்து தினம்: கூரை மீது ஆட்டம் போட்ட 24 மாணவர்கள் கைது

பேருந்து தினம்: கூரை மீது ஆட்டம் போட்ட 24 மாணவர்கள் கைது

1 mins read

சென்னை: பேருந்து தினக் கொண்டாட்டத்தின் போது வரம்பு மீறி செயல்பட்ட கல்லூரி மாண வர்கள் 24 பேர் கைதாகி உள்ளனர். மாணவர்களின் செயல்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள கல்லூரி கள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டதும் மாணவர் கள் தங்கள் வசதிக்கேற்ப குறிப் பிட்ட நாளன்று பேருந்து தினம் கொண்டாடுவது வழக்கம். இதற்கு போலிசார் தடை விதித்துள்ளனர்.

எனினும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, புதுக் கல்லூரி மாணவர் கள் பேருந்து தினம் கொண்டாடி னர். அச்சமயம் ஆவடி, அண்ணா சதுக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தின் கூரை மீது ஏறி நின்று சில மாணவர்கள் ஆட்டம் போட்டனர்.

மேலும் பெரிய பெரிய பதாகை களையும் கையில் ஏந்திக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்தின் கூரையில் நின்றுகொண்டே சென்றனர்.

இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்திய போது, பேருந்து மேற்கூரையின் முன்புறம் இருந்த மாணவர்கள் சடசடவென சரிந்து கீழே விழுந்தனர்.

நல்ல வேளையாக ஓட்டுநர் பேருந்தை மீண்டும் இயக்காததால் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. சிறு காயங்களுடன் மாணவர்கள் தப்பினர்.

இந்நிலையில் மாணவர்களின் இந்த அத்துமீறிய செயல்பாடு குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தீவிர விசா ரணை நடத்தி 24 மாணவர்களை கைது செய்தனர். மேலும் சிலர் கைதாகலாம் எனத் தெரிகிறது.