நடவடிக்கை இல்லை என அதிமுக எம்எல்ஏ ஆதங்கம்

நடவடிக்கை இல்லை என அதிமுக எம்எல்ஏ ஆதங்கம்

1 mins read

ஈரோடு: அதிமுகவில் அதிகார பலம் படைத்தவர்கள் எதிர்க் கட்சிகளுக்கு அப்பட்டமாகத் துணைபோனதாக அக்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்ச ருமான தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, இந்த துரோகச் செயல் குறித்து கட்சித் தலை மையிடம் உரிய ஆதாரங்களை அளித்திருப்பதாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தனது புகார் மீது கட்சித் தலைமை இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் கட்சித் தலைமை மவுனம் காப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

"இந்த மவுனம் தொடர்ந்தால் அடுத்து வர உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலி லும் கட்சிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அடிமட்டத் தொண்டர் களை மதிக்காமல் இருப்பது நல்லதாக அமையாது.

"அதிமுகவில் ஒற்றைத் தலை மையோ, இரட்டைத் தலைமையோ, எதையும் ஏற்க நான் தயாராக உள்ளேன்," என்றார் தோப்பு வெங்கடாசலம்.