தண்ணீர் நெருக்கடி: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் இது குறித்து விவாதிக்க உள்ளார் முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவ மழை பொய்த் துள்ள நிலையில், கோடை வெயி லும் கடுமையாக இருந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக தலைநகர் சென்னை யில் நிலைமை படுமோசமாக உள்ளது. தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் தினந்தோறும் மூன்று குடங்கள் அளவுள்ள தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுவதா கவும் பல இடங்களில் இதற்குக் கூட வழியில்லை என்றும் கூறப் படுகிறது.

தனியார் நிறுவனங்கள் தங் கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுமாறு பணித்துள்ளன. உணவகங்கள் மதிய உணவை ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆட்சியாளர்கள் மீது பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள னர். எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், இன்று புதன் கிழமை துவங்கி மூன்று தினங்க ளுக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணாளி வசதி மூலம் ஆலோ சனை நடத்த உள்ளார் முதல்வர் பழனிசாமி.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் குடிநீர் வழங் கல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

தண்ணீர் பிரச்சினை குறித்து விரிவான ஆலோசனை நடை பெறும் என்றும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிப்பதற்குரிய திட்டங்கள், அவற்றைச் செயல் படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

“வரும் காலங்களில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடைமுறையில் உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட் டங்களை தீவிரப்படுத்துவது உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள் ளது,” என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்க் கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சென்னையில் 2017ஆம் ஆண்டு 450 மில்லியன் கன அடி தண்ணீர்தான் தினந்தோறும் வினியோகிக்கப்பட்டது. தற்போது 525 மில்லியன் கன அடி தண்ணீர் கொடுத்து வருகிறோம். நவம்பர் மாதம் முடியும் வரை இந்த அளவு தண்ணீர் வினியோகிக்கப்படும்,” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது அப்பட் டமான பொய் என மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடி உள்ளார்.

தற்போது தமிழகத்தில் குடிப் பதற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!