பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள் 

வேலூர்: குடிப்பது, குளிப்பது, சமைப்பது உள்ளிட்ட அத்தியா வசியத் தேவைகளுக்கு தண்ணீ ரின்றி தமிழக மக்கள் பலரும் அல் லல்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் வற்றி, வெடித்து, பாலைவனமா கக் கிடந்த நதி ஒன்றுக்கு புத்து யிர் தந்து உயிர்ப்பித்துள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி மேம்பாட்டுப் பணியில் கிட்டத்தட்ட 20,000 பெண்கள் ஈடுபட்டு இப்போது தங்கள் பகுதியை தண்ணீர் பிரச்சினை இன்றி செழிப்பாக வைத்துள்ளனர். 

2014ஆம் ஆண்டில் தொடங் கப்பட்ட இந்த நாகநதி மேம்பாட்டுப் பணிக்கு ரூ.5 கோடி பணம் செல விடப்பட்டது. வேலூரைச் சுற்றிலும் சுமார் 3,500 கிணறுகள் தூர்வாரப் பட்டுள்ளன. 20,000 பெண்களின் கடும் முயற்சியால் இப்பணிகள் அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.   

ஏறக்குறைய இந்தியாவின் பாதிப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி, குடிநீருக்கே மக்கள் அல் லல்பட்டு வரும் நிலை நிலவுகிறது. 

இந்நிலையில் வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த பெண்கள், இறந்துபோன நாக நதி ஆற்றுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் வேலூர் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது நாகநதி. 

பின்னர் நீர்வரத்து இன்றி மெல்ல மெல்ல வறண்ட இந்த ஆறு கடந்த 15 ஆண்டுகளாக முற்றிலும் காணாமல் போனது. 

இதனைத் தொடர்ந்து பல கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் குடி நீருக்கும் விவசாயத்திற்கும் தண் ணீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் நீர் நிலைகளைப் பாதுகாக்க எண்ணிய உள்ளூர் தன்னார்வலர்களும் மகளிர் குழுவைச் சேர்ந்த 20,000 பெண் களும் ஒன்றிணைந்து கடந்த 4 ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து 2018ஆம் ஆண்டு நாக நதியை மீண்டும் உயிர்பெறச் செய்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த் துவதற்காக மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள், மழைநீர் வடிகால்கள் ஆகியனவும் அமைத்துள்ளனர். தற்போது இந்த ஆறு மீண்டும் உயிர் பெற்று ஓடத் துவங்கியதுடன் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளதாக நாகநதி உயிர்ப்புத் திட்டத்தின் இயக்குநர் சந்திரசேகரன் குப்பன் தெரிவித்துள்ளார். 

 

Read more from this section

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கியைக் கட்டுப்படுத்தும் 45 நடமாடும் மருத்துவக் குழுவினர். படம்: ஊடகம்

11 Oct 2019

டெங்கியைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழு