குடிநீர் பிரச்சினையைக் கண்டித்து போராடிய 600 திமுகவினர் கைது

3 mins read

கோவை: தண்ணீர் பிரச்சினை பெரும் தலைவலியாகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாநக ராட்சியை முற்றுகையிட்டு ஏராள மான ஆண்களும் பெண்களும் காலி குடத்துடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை நடத்திய திமுக எம்எல்ஏ கார்த்திக், முன் னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட 600க்கும் மேற் பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக டவுன்ஹால் பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

சீரான முறையில் குடிநீர் வழங் கக் கோரியும் வெளிநாட்டு நிறு வனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில், "கோவையில் பல இடங்களில் மாதத்துக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. குடிநீர் விநியோகமும் சரியில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். வறட்சி, தண்ணீர் பிரச்சினை என்று முன் கூட்டியே தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

"தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினைக்குப் பொறுப்பு ஏற்று அமைச்சர் பதவி விலகவேண்டும்," என்றார்.

இதற்கிடையே இந்த தண்ணீர் பிரச்சினை குறித்து செய்தியாளர் களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பருவமழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீரும் கீழே சென்றுவிட்டது என்றபோதி லும் மக்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும்," என்று உறுதி அளித்தார்.

"ஏதோ ஓர் இடத்தில் பிரச் சினை இருந்தால் அதைப் பெரிது படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உரு வாக்கவேண்டாம். அரசைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சி னைகள் எங்கெல்லாம் இருக் கிறதோ அங்கெல்லாம் நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

"இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு மாவட்ட ஆட்சி யருக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்கு தேவையான நிதி ஒதுக்கி, முறையாக நீர் விநியோகிக்கப்படு கிறது," என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் லாரிகள் மூலம் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறிவரும் நிலையில் லாரி வருமா? தண்ணீர் கிடைக் குமா என்ற கவலையுடன் வழிமேல் விழிவைத்து மணிக்கணக்கில் சென்னைவாசிகள் காத்துக்கிடப்ப தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

தண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள், ஹோட்டல்கள் என பலதரப்பு பிரிவினரும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சில ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், திருவல்லிக் கேணியில் போதுமான நீரின்றி தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன.

தினமும் லட்சக்கணக்கில் பய ணிகள் வந்துசெல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் கடும் தண் ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் அங்குள்ள கழிவறைகளுக்கும் முறையாகத் தண்ணீர் வழங்கமுடி யாததால் அவை பல நேரங்களில் மூடப்பட்டே கிடக்கின்றன.

ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள குழாய்களிலும் முறையாகத் தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 30,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்ப தாகவும் அது போதுமானதாக இல்லை என்றும் சென்டிரல் ரயில் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சஞ்சீவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கழிவறையைப் பராமரிக்கப் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.