சாகுபடிக்காக கர்நாடகம் நீரை திறந்துவிடும் என எதிர்பார்ப்பு

சாகுபடிக்காக கர்நாடகம் நீரை திறந்துவிடும் என எதிர்பார்ப்பு

1 mins read

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். குமாரசாமியின் கருத்துப்படி தமிழகத்திற்கு குறுவை சாகு படிக்காக விரைவில் கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறுகையில், "நமது நீரை நாமே முழுமை யாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். நாம் கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கட் டுப்பட வேண்டியது நியதி.

"காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளோம்," என்று கூறினார்.