உதயநிதிக்கு வழிவிட்டு திமுக இளைஞரணி செயலாளர் விலகல்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், 43, எந்த நேரத்திலும் திமுக இளைஞர் அணிச் செயலாளராக அறிவிக்கப் படலாம் என்ற நிலை உள்ளது. இதுநாள் வரை திமுக இளைஞர் அணிச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், உதயநிதிக்கு வழிவிடும் வகையில் தமது பதவியை விட்டு விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தீவிர பிர சாரம் மேற்கொண்டார். எல்லா இடங்களிலும் அவரது பேச்சுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்ததாக திமுக முன்னணித் தலைவர்கள் கூறி வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து கட்சியின் எதிர்கால நலன் கருதி உதய நிதியையே இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கக் கோரி  மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றி அறிவாலயத்திற்கு அனுப்பி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்ட திமுகதான் முதன்முதலாக  மே 28ஆம் தேதி உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து இதர மாவட்டங்களும் அதுபோன்ற தீர்மானத்தை நிறை வேற்றின.

அத்துடன், அந்த தீர்மானங் களை வெளியிடுவதில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முர சொலி முக்கியத்துவம் காட்டி வரு கிறது. உதயநிதிக்குப் பதவி தருவதில் கட்சித் தலைமைக்கும் விருப்பம் என்பதையே அது உணர்த்துகிறது.

உதயநிதியை முழுநேர அர சியல்வாதி ஆக்குவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத் தியதாக ஊடகச் செய்திகள் கூறு கின்றன.

இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “வெள் ளக்கோவில் சாமிநாதன் தமது இளைஞர் அணிச் செயலாளர் பத வியை விட்டு விலகியது ரகசிய மான ஒன்றல்ல; எல்லாரும் எதிர் பார்த்ததுதான். உதயநிதியை அந் தப் பொறுப்புக்கு நியமிக்க தலைமை முயன்றுவருவதன் தொடர்ச்சியாக இந்தப் பதவி வில கல் நிகழ்ந்துள்ளது,” என்றனர்.

 

Read more from this section

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கியைக் கட்டுப்படுத்தும் 45 நடமாடும் மருத்துவக் குழுவினர். படம்: ஊடகம்

11 Oct 2019

டெங்கியைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழு