துரைமுருகன், பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

துரைமுருகன், பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

1 mins read
Google News Preferred Icon

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மாலையில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது.

இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வழக்கமான சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரே நாளில் இரு முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.