மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

தமது பள்ளியில் படிக்கும் மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவனின் காணொளி இணைய உலகில் பிரபலமாகி வருகிறது.

செல்வம் என்ற அரசு பள்ளி ஆசிரியர் தமது டுவிட்டர் இணையப்பக்கத்தில் அண்மையில் ஒரு காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். 

உணவு நேரத்தின்போது மாணவர்கள் பலர் தரையில் வரிசையாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அவர்களில் பலர் மன நலம் குன்றியவர்கள் என்று அறியப்படுகிறது.

அப்பொழுது தமது உணவைச் சுயமாக எடுத்து உண்ணத் தெரியாத தமது நண்பனுக்குக் கைகளால் உணவு ஊட்டிவிடுகிறான் மற்றொரு சிறுவன். 

இந்த காணொளியைப் பார்த்து பலரும் மனம் உருகி டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.