இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்று 'நிதி ஆயோக்' அமைப்பின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் குடிநீர் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப் படக்கூடும்.
தமிழகத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறித்து நிதிஆயோக் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளி யிட்டுள்ளது.
அதில், மற்ற நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீர் ஆதா ரங்கள், மழைப்பொழிவு இருந்த போதிலும் மூன்று ஆறுகள், நான்கு நீர்நிலைகள், ஐந்து சதுப்பு நிலங்கள், ஆறு வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் உள்ளன.
மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினருக்குக் குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபாய நிலை அடுத்த ஆண்டிலேயே தொடங்கக்கூடும்.
இது குறித்து தேசிய நீர்வளக் கழக முன்னாள் இயக்குநரான பேராசியர் மனோகர் குஷலானி கூறுகையில், "சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நம்பி தமிழக அரசாங்கம் உள்ளது. இது அதிக செலவுமிக்க திட்டம். அத்துடன், பூமியில் குறிப்பிட்ட அளவே நீர் உள்ளது. கடல்நீரைக் குடிநீராக்கினால் கடல்கள் வற்றிவிடும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது," என்றார்.
"நமது குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் நாம் எதை விட்டுச் செல்ல போகிறோம்? நம்மிடம் ஏராளமான பணம் இருக் கலாம். ஆனால் நமது குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீருக்குப் பதில் பணத்தைக் குடிக்க, கொடுக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்குவது தீர்வாகாது. அதற்குப் பதிலாக, மழைநீர் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்," என்றார் பேராசிரியர் மனோகர்.
நீரைச் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகளும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டியது அவசியம் என்றும் நிதிஆயோக் வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

