சட்டமன்றக் கூட்டத் தொடர் 28ஆம் தேதி தொடங்குகிறது

சட்டமன்றக் கூட்டத் தொடர் 28ஆம் தேதி தொடங்குகிறது

1 mins read

சென்னை: தமிழக சட்டமன்றம் ஜூன் 28ஆம் தேதி காலை 10 மணிக்குக்கூடும் என்று சட்ட மன்றச் செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளார். இதற்கு முன்னேற்பாடாக துறை வாரியாகக் கொள்கை விளக்கக் குறிப்புகளை தயாரிக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப் பாக சென்னையில் குடிநீர் தட்டுப் பாடு மிக அதிக அளவில் உள் ளது. எனவே இந்தப் பிரச்சினை சட்டமன்றத் தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளன்று மறைந்த உறுப் பினர்களுக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும். ஜூலை 1 ஆம் தேதி முதல் சட்ட மன்ற நிகழ்ச்சிகள் தொடங்கும். இந்தக் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.