சென்னையில் திடீர் மழை; உற்சாகம்

சென்னையில் திடீர் மழை; உற்சாகம்

1 mins read

சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில் நகரத்தின் பல இடங்களில் நேற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு பரவலாக மழை பெய்தது.

மேலும் வெயிலில் வாடி வதங்கியிருந்த மக்கள் மழையால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோவிலம்பாக்கம், குன்றத்தூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

திருப்போரூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.