நகைக் கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நகை திருடிய பெண்கள்

நகைக் கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நகை திருடிய பெண்கள்

1 mins read

சென்னை: சென்னை புறநகரில் உள்ள நகைக் கடை உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பி நகைகளைத் திருடிய இரு பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அதே பகுதியில் வசிக்கும் தருண் குமார் 'எஸ்எம் ஜூவல்லரி' எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் நகைகளை வாங்குவதுபோல நடித்து 150 கிராம் நகைகளைத் திருடி விட்டனர். அதில், ஒரு பெண் தருண் குமாரிடம் நகையைக் காட்ட சொல்லியிருக்கிறார். நகையை எடுக்க தருண்குமார் திரும்பிய போது மற்றொரு பெண் சிறு பெட்டியில் இருந்த நகை களை எடுத்துத் தனது பைக்குள் வைத்துக்கொண்டார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து நழுவிவிட்டனர். இந்தக் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.

கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் தருண்குமார் புகார் அளித்தார். இதையடுத்து கண் காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இரு பெண் களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.