நடிகர் சங்கத் தேர்தல்; ஆளுநரைச் சந்தித்த சங்கரதாஸ் அணி

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர்-விஷால் அணிக்கு எதிராக போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் நேற்று ஆளுநரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ், “விஷால் அணியினர் ஆளுநரைச் சந்தித்த தால் நாங்களும் சந்தித்தோம்,” என்றார்.

“நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளு நரிடம் புகார் மனு அளித்துள்ளோம். நடிகர் சங்கத் தேர்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஆளுநர் தெரிவித்தார்.

“விஷால் அணியினர் பொய் களைச் சொல்லி வருகின்றனர். அவர்களது அணிக்குள் ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கம் பிளவு பட்டதற்கு நடிகர் விஷால் மட்டும் காரணமல்ல. நடிகர் நாசரும் கார்த்தியும்தான் காரணம்,” என்று ஐசரி கணேஷ் சொன்னார்.

இதற்கு முன்பு ஆளுநர் பன் வாரிலால் புரோகித்தை நடிகர் விஷால் அணியினர் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த விஷால், நீதிமன்ற தீர்ப் பின் வழிகாட்டுதலின்படி முறை யாகவும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற விருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, மாவட்டப் பதி வாளர் நேற்று முன்தினம் நிறுத்தி வைத்தார். நடிகர் சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 61 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!