சென்னை: சென்னையின் தாகத்தை ஓரளவுக்காவது தணிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள் ளார்.
அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் கோபால புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங் கேற்று அவர் யோகா பயிற்சி செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
"சென்னைக்குக் கூடுதலாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஏரி களை குடிநீர் ஏரியாக மாற்ற ஜெய லலிதா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக அயனம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரிகளில் முறையே ரூ.32 கோடி, ரூ.30 கோடி செலவில் குடிநீராக மாற்ற நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன.
"சென்னையின் தாகத்தை ஓரளவுக்காவது தணிக்க முயன்று வருகிறோம். இதற்காக நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. மழைநீர் சேகரிப்புத் திட் டத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அந்தத் திட்டத்தைத் தீவிரப்படுத்த நட வடிக்கைகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன.
குவாரி போன்ற அடையாளம் தெரியாத இடங்களிலிருந்தும் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுத்து வரு கிறோம். இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை குறையும்," என்று மாஃபா பாண்டியராஜன் சொன்னார்.

