ஒரே மாணவருடன் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது

ஒரே மாணவருடன் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது

1 mins read

கோயம்புத்தூர்: வாள்பாறை சின்னக்கள்ளரில் உள்ள 76 ஆண்டு பழமையான தொடக்கப் பள்ளி ஒரே ஒரு மாணவருடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-2018 கல்விப் பருவத்தில் மாணவி ஒருவர் படிப்பை முடித்து உயர்நிலைப் பள்ளிக்கு மாறிவிட்டார்.

அதன் பிறகு யாரும் சேராததால் இந்தப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் சின்னக் கள்ளரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் ராஜேஸ்வரி தனது ஆறு வயது மகனை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க விரும்பினார்.

ஆனால் அருகிலிருந்த ஒரே பள்ளியான ஆதி திராவிடர் நலப் பள்ளி மூடப்பட்டிருந்ததால் தமது மகன் சிவாவை சேர்க்க பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ராஜேஸ்வரி கோரிக்கை விடுத் தார்.

அவரது கோரிக்கை ஏற்கப் பட்டு பள்ளி மீண்டும் திறக்கப் பட்டது.

"திருமதி ராஜேஸ்வரியின் வேண்டுகோளை ஏற்று திங்கட் கிழமை அன்று அவரது மகன் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப் பட்டார்," என்று பெரியகள்ளரில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சக்திவேல் கூறினார்.

ஓராண்டுக்கு முன்பு இந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரி யர்கள், ஊழியர்கள் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக 1943ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாண வர்கள் இங்கு பயின்றுவந்தனர்.